திருமணமாகாத விரக்தியில் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஊரம்பு பகுதியில் ராஜேஷ் என்ற பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் வசித்து வந்துள்ளார். இவர் தென்னை மரம் ஏறும் தொழில் செய்து வந்துள்ளார். இவர் தன்னுடைய இரண்டு தங்கைகளுக்கும் திருமணம் செய்து வைத்துள்ளார். இந்நிலையில் தனது தாய் தூங்கிய பின்பு வீட்டின் அருகே உள்ள மரத்தில் கயிறு கட்டி ராஜேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுகுறித்து கொல்லங்கோடு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து விட்டனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில், திருமணம் ஆகாததால் ராஜேஷ் மன உளைச்சலை இருந்தது தெரியவந்துள்ளது. அதோடு ஏற்கனவே இரண்டு மூன்று முறை தற்கொலைக்கு முயற்சி செய்ததும், அவரை மற்றவர்கள் காப்பாற்றியதும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.