மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவரான, அப்துல் கலாம் சகோதரர் முத்து மீரான் மரைக்காயர் காலமான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது .
ராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவரான அப்துல் கலாமின் ,மூத்த சகோதரர் முகமது முத்து மீரான் லெப்பை மரைக்காயர் காலமானார். கடந்த நவம்பர் மாதம் 5ம் தேதியில் தன்னுடைய 104 வது பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்தார். ஆனால் கடந்த இரண்டு மாதங்களாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார்.
இதன் காரணமாக வீட்டின் சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் நேற்று இரவு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இவரது மறைவிற்கு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். இவரது உடலை , காலை 11 மணியளவில் முகைதீன் ஆண்டவன் பள்ளிவாசலில் அடக்கம் செய்தனர்.