Categories
தேசிய செய்திகள்

கடைசி நேரத்தில் மணமேடையை விட்டு இறங்கிய மணப்பெண்…” இது தான் காரணமாம்”… என்ன தெரியுமா..?

திருமணத்தின் போது மணமகனின் முகத்தைப் பார்த்து மணமகள் கடைசி நேரத்தில் திருமணத்தை நிறுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தின் மேற்கு சம்பரான் மாவட்டத்தில் உள்ள பெட்டியாலா என்ற பகுதியில் ஒரு திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து மணமகள் கடைசி நேரத்தில் திருமணம் வேண்டாம் என்று கூறினார். ஏன் என்று கேட்டபோது வாட்ஸ் அப்பில் தனக்கு காட்டப்பட்ட புகைப்படமும், திருமண விழாவில் மணமகனின் முகமும் வேராக உள்ளது என்று கூறினார். இதையடுத்து திருமணத்தை செய்து கொள்ளுமாறு கட்டாயப் படுத்தப் பட்டது. இருந்தாலும் மணப் பெண் ஒப்புக்கொள்ளாமல் மண்டபத்தில் இருந்து வெளியேறினார்.

மணமகனின் தந்தை திருமணத்திற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து, உறவினர்கள் விருந்தினர்கள் என அனைவரையும் அழைத்து அவர்கள் முன்பு பெரும் அவமானமாக பார்க்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். இதையடுத்து மணமகனின் குடும்பமோ அல்லது மணமகளின் குடும்பமும் காவல்துறையில் புகார் எதுவும் அளிக்கவில்லை.

Categories

Tech |