Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

புதுசு புதுசா யோசிக்கிறாங்க…. இப்படி கூட செய்யலாமா…. அதிகாரியின் வித்தியாசமான முயற்சி…!!

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பாராகிளைடரில் பறந்தபடி சாகச நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அதிகாரிகள் அனைவரும் வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்து தீவிரமாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கன்னியாகுமரி கடற்கரையில் பாராகிளைடர் மூலம் சாகச நிகழ்ச்சி நடத்தியுள்ளனர். இந்த நிகழ்ச்சியை குமரி மாவட்ட நிர்வாகம் கோவையில் உள்ள இந்திய வான் விளையாட்டு மற்றும் அறிவியல் மையம் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது.

இதனை அடுத்து பாராகிளைடரில் வானில் பறந்து தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேர்தல் அதிகாரி அரவிந்த் நிகழ்ச்சியை தொடங்கி வைத்துள்ளார். இதனை தொடர்ந்து பள்ளி மாணவி முதன் முதலில் பத்து நிமிட நேரம் பறந்து தேர்தல் விழிப்புணர்வு சாகச நிகழ்ச்சியை நடத்தி உள்ளார். அப்போது வாக்களிக்க வேண்டியது அவசியம் மற்றும் 100 சதவீத வாக்குப்பதிவு நடைபெற வலியுறுத்தும் வகையிலான வாசகங்கள் அதில் எழுதப்பட்டுள்ளன. அதன் பின்  மாவட்ட தேர்தல் அதிகாரி அரவிந்த் வானில் பறந்து விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். மேலும் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தும் பொருட்டு நிகழ்ச்சியில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது.

Categories

Tech |