காதல் தோல்வியில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கலிங்கராஜபுரம் பகுதியில் சரவணன் என்ற கூலித்தொழிலாளி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் இருக்கும் ஒரு அறையில் தூங்க சென்ற சரவணன் நீண்ட நேரமாகியும் கதவை திறக்காததால் சந்தேகம் அடைந்த அவரது தாய் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது தனது மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த நித்திரவிளை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது கடந்த சில நாட்களாக காதல் தோல்வியால் சரவணன் மனமுடைந்து காணப்பட்டது தெரியவந்துள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் காதல் தோல்வியால் தான் சரவணன் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.