அரக்கோணத்தில் மனைவியின் பிரிவால் கணவன் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது .
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதிக்கு அடுத்துள்ள முள்வாய் கிராமத்தை சேர்ந்த 52 வயதுடைய சுரேஷ் ராவ் ,டெய்லர் தொழில் செய்து வந்துள்ளார். இவரின் குடிப்பழக்கத்தினால் கணவன்-மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதன் காரணமாக அவரின் மனைவி , தன் குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர் , விரக்தியில் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். இதுதொடர்பாக அரக்கோணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.