துப்பாக்கிச்சூடு போட்டியில் தங்கம் வென்ற அஜித்திற்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
பிரபல முன்னணி நடிகராகத் திகழும் அஜித் நடிப்பில் மட்டும் இல்லாமல் பல்வேறு துறைகளில் தன் திறமையைக் காட்டி வருகிறார். அந்த வகையில் அவர் சமீபகாலமாக சென்னை ரைஃபிள் கிளப்பில் துப்பாக்கிச்சூடு பயிற்சி மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் 46வது தமிழ்நாடு மாநில துப்பாக்கிச் சூடு போட்டி நடைபெற்றது.
அப்போட்டியில் தல அஜித் தங்கப் பதக்கத்தை வென்றார்.இதனை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் தமிழக துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் வெற்றி பெற்ற அஜித்திற்கு தனது வாழ்த்துக்களை ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது, “தனது அயராத உழைப்பாலும் தன்னம்பிக்கையாலும் திரைத்துறை மட்டுமின்றி பல்வேறு துறைகளில் சாதித்துவரும் அன்புச்சகோதரர் திரு.அஜீத்குமார் அவர்கள் சென்னையில் நடைபெற்ற 46வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்றிருப்பதில் மகிழ்ச்சி. அவருக்கு எனது அன்பார்ந்த வாழ்த்துகள்!”என்று தெரிவித்துள்ளார்.
தனது அயராத உழைப்பாலும் தன்னம்பிக்கையாலும் திரைத்துறை மட்டுமின்றி பல்வேறு துறைகளில் சாதித்துவரும் அன்புச்சகோதரர் திரு.அஜீத்குமார் அவர்கள் சென்னையில் நடைபெற்ற 46வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்றிருப்பதில் மகிழ்ச்சி. அவருக்கு எனது அன்பார்ந்த வாழ்த்துகள்! pic.twitter.com/ZPfbY08uzJ
— O Panneerselvam (@OfficeOfOPS) March 8, 2021