Categories
தேசிய செய்திகள்

அய்யயோ! 90% பொண்டாட்டிங்க பேய் தானே…? – சர்ச்சையான போஸ்டர்…!!

ஒவ்வொரு வருடமும் மார்ச் 8ஆம் தேதி மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பெண்ணும் தாயாகவும், மனைவியாகவும், மகளாகவும் நம்முடைய உறவின் அனைத்து பகுதிகளிலும் நிறைந்து காணப்படுகிறாள். பெண் இல்லையேல் இவ்வுலகில் மனித உயிர்கள் இல்லை. மேலும் ஒவ்வொரு கணவனின் வெற்றிக்குப் பின்னும், அண்ணனின் வெற்றிக்கு பின்னும் தந்தையின் வெற்றிக்குப் பின்னும் ஒரு பெண் இருக்கிறாள். இவ்வளவு சிறப்பு வாய்ந்தவள் பெண் என்பதால் தான் ஒவ்வொரு நாடுகளுக்கும், நதிகளுக்கும், மலைகளுக்கும் பெண்கள் பெயர் வைக்கப்படுகிறது.

அந்த அளவுக்கு பெண் பெண்கள் பெருமை வாய்ந்தவர்கள். பெண்கள் இன்றைய காலகட்டத்தில் பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்குகின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை. இந்நிலையில் இன்று உலக மகளிர் தினம் கொண்டாட படும் நிலையில் “நாயே பேயே” என்ற திரைப்படத்தின் போஸ்டரால் சர்ச்சை எழுந்துள்ளது. அந்த போஸ்டரில் முதன்முதலாக பேய கல்யாணம் பண்ணிக்கப் போறது நான் மட்டும் தானா? 90% பொண்டாட்டிங்க பேய் தானே? என்று பெண்களை மிகவும் மோசமாக கிண்டலடித்துள்ளனர். ஆனால் இந்த இந்த சர்ச்சையான போஸ்டர் குறித்து பெண்ணியம் பேசும் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

 

Categories

Tech |