மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு பணம் கட்ட முடியாததால் மூன்று வயது குழந்தை வலி தாங்க முடியாமல் கதறி அழுது உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரப்பிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜ் என்ற நகரத்தில் தனியார் மருத்துவமனையில் 3 வயது சிறுமிக்கு அறுவை சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். ஆனால் அறுவை சிகிச்சை செய்ய 5 லட்சம் பணம் தேவை பட்டுள்ளது. இதையடுத்து அந்த குடும்பத்தினரால் பணம் கட்ட முடியாததால் அறுவை சிகிச்சை செய்து தையல் கூட போடாமல் அந்த குழந்தையை மருத்துவமனை யிலிருந்து வெளியே அனுப்பி உள்ளனர். இதனால் குழந்தையின் பெற்றோர் கதறி அழுதனர். அந்த குழந்தை வலி தாங்க முடியாமல் துடித்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் மரணத்துக்கு சமமானது என்று கூறப்பட்டது.
இந்நிலையில் இந்த கொடூர சம்பவம் குறித்து குழந்தைகள் உரிமை பாதுகாப்பு தேசிய ஆணையம் வழக்குப்பதிவு செய்து அந்த மருத்துவமனையிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதுகுறித்து விசாரித்தபோது மருத்துவமனை துணைத்தலைவர் சாத்பால் குல்தானி தையல் போட்டு தான் அனுப்பியதாகவும், வேறு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அதை பிரித்து இருந்ததாகவும் கூறினார். பணம் இல்லாததால் குழந்தை துடி துடித்து இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.