தமிழக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் அதிக தொகுதிகளில் வெற்றி பெறுமா என்ற கவலை திமுகவிற்கு உள்ளது என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான பா. சிதம்பரம் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் நடைபெற்ற காங்கிரஸ் பொது கூட்டத்தில் பங்கேற்றார். காங்கிரஸ் கூட்டணியில் குறைவான இடங்களை கடந்த தேர்தலில் பெற்றதற்காக தி.மு.க.வை குறை சொல்வதில் எந்தவிதத்திலும் அர்த்தமும் இல்லை என்று கூறினார்.
கடந்த ஆண்டு 2011 இல் தி.மு.க கூட்டணியில் 63 தொகுதிகளில் ஐந்து இடங்களையும் பெற்றது. 2016 இல் நடந்த தேர்தலில் 41 தொகுதிகளில் 8 இடங்கள் பெற்று காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதாகவும் பா. சிதம்பரம் தெரிவித்தார். இதனை தொடர்ந்து இன்னும் கூடுதல் தொகுதிகளை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கினால் வெற்றி பெறுவார்களா? என்ற கவலை தி.மு.க.விற்கு அதிகமாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.