இருமடங்கு கேஸ் விலை உயர்ந்துள்ளதாக பா சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் ஆட்சியில் இருந்ததை விட பாஜக ஆட்சியில் இருமடங்கு கேஸ் விலை உயர்ந்துள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். 2016ல் காங்கிரஸ் ஆட்சி நிறைவு பெற்றபோது கேஸ் சிலிண்டரின் விலை 410 ரூபாயாக இருந்தது. தற்போது கேஸ் விலை 820 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. மோடி அவர்களின் ஆட்சியில் இந்தியா இரண்டு மடங்கு முன்னேறி இருக்கிறது என்று விமர்சித்துள்ளார்.