மண்டைக்காடு பகவதியம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு இன்று அம்மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்படுகின்றது.
கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதியம்மன் கோவில் கொடை விழா வருடந்தோறும் மார்ச் 9ஆம் தேதியன்று கோலாகலமாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில் இன்று குமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி கொடை விழா நடைபெற இருக்கிறது.
இதையடுத்து குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் அனைத்திற்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இதற்கு மாற்றாக ஏப்ரல் 10-ஆம் தேதி அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வேலை நாளாக இருக்கும் என்று மாவட்ட ஆட்சியர் மா. அரவிந்த் தெரிவித்துள்ளார்.