இயற்கையாக தேன் கூட்டிலிருந்து பிரித்தெடுக்கப்படும் தேனானது நம்முடைய உடலுக்கு நிறைந்த சத்துக்களை கொடுக்கிறது. நம்முடைய அன்றாட பழக்கவழக்கங்களில் நம்முடைய உடலுக்கு தேவையான சத்து நிறைந்த ஆரோக்யமான பொருட்களையும் எடுத்துக்கொள்ள வேண்டும், அந்த வகையில் தேனும் அடங்கும். தேன் செயற்கையாகவும் விற்கப்படுகிறது. எனவே தேன் வாங்கும்போது நல்ல தேனா? என்பதை பார்த்து வாங்கவேண்டும். தேன் வெப்பம் நிறைந்தது ஆகும். இதில் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்ட்கள் நமக்கு பக்கவாதம், மாரடைப்பு மற்றும் புற்று நோய்களில் இருந்து பாதுகாக்கிறது .
ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவை குறைத்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது. குழந்தைகளுக்கு கொடுப்பதன் மூலம் நிறைய மருத்துவ குணங்கள் கிடைக்கிறது. முக்கியமாக தேனில் உள்ள பாலிஃபீனால் என்னும் பொருள் இதயத்திற்கு இரத்தம் கொண்டு செல்லும் கரோனரி ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்து ரத்தம் உறைதலைத் தடுத்து நிறுத்துகிறது.