Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வீட்டை விட்டு ஓடிய கள்ளக்காதல் ஜோடி… விடாமல் துரத்திய கணவர்… சிவகங்கையில் கொடூர சம்பவம்..!!

சிவகங்கையில் வீட்டை விட்டு ஓடிய கள்ளக்காதலர்கள் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மனச்சனேந்தல் கிராமத்தில் சத்தியேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 7 வருடங்களுக்கு முன்பு சிவகங்கை மாவட்டம் கிளாங்காட்டூரில் வசித்து வரும் வளர்மதி என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கஜேந்திரன் சின்னக்கடை வீதி ஒன்றில் திருச்சியில் வேலை பார்த்து வந்துள்ளார். இதனால் குழந்தைகளையும், மனைவியும் அவ்வப்போது ஊருக்கு சென்று பார்த்துவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் ஒரு மாதத்திற்கு முன்பு வளர்மதியை திடீரென காணவில்லை. அவரை சத்தியேந்திரன் பல இடங்களுக்கு சென்று தேடி பார்த்துள்ளார். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. அதன்பின் விசாரித்ததில் மனச்சனேந்தல் பகுதியில் வசித்து வரும் வேல்ராஜ் என்பவருக்கும், வளர்மதிக்கும் கள்ளக்காதல் இருந்ததும், அதனால் அவர்கள் ஊரை விட்டு ஓடியதும் தெரியவந்தது. இந்நிலையில் அவர்கள் திருச்சியில் வாடகை வீடு எடுத்து குடியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து சத்தியேந்திரன் அவரது தம்பி ராசையா, பிரபு மற்றும் உறவினர் தனசேகர், காட்டுராஜா ஆகியோருடன் திருச்சிக்கு சென்றுள்ளார்.

அங்கு வேல்ராஜை சரமாரியாக அடித்து விட்டு வளர்மதியை இழுத்துச் சென்றுள்ளனர். இதில் மோசமாக காயமடைந்த வேல்ராஜ் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிந்த திருச்சி காந்தி மார்க்கெட் காவல்துறையினர் சத்தியேந்திரன் உட்பட 6 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த காட்டுராஜாவும், தனசேகரனும் வளர்மதியை சந்தித்து எங்கள் மீது கொலை வழக்கு வந்ததற்கு நீதான் காரணம் என்று கூறி தகராறு செய்துள்ளனர். அந்த தகராறு முற்றியதில் இருவரும் வளர்மதியை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த வளர்மதி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த மானாமதுரை காவல்துறையினர் வளர்மதியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை குறித்து தனசேகர், காட்டுராஜா ஆகிய இருவரையும் காவல்துறையினர் தீவிர விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |