Categories
தேசிய செய்திகள்

இன்னும் கொஞ்ச நாட்களில்…. இந்தியாவின் பெயர் “மோடி”…. மம்தா பானர்ஜி…!!

தமிழகம், மேற்கு வங்கம், கேரளம், புதுச்சேரி, அஸ்ஸாம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. அதற்கான தேதியையும் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. மேலும்  மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். பாஜகவினரும் காங்கிரஸ் கட்சியினரும் ஒருவரை ஒருவர் குறை கூறிக்கொண்டு விமர்சனம் செய்து வருகின்றனர். பாஜக எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று முனைப்பு காட்டுகிறது.

இந்நிலையில் மம்தா பானர்ஜி, இந்த நாட்டுக்கு மோடி என்று பெயர் வைக்க நாள் வெகுதொலைவில் கிடையாது என்று தெரிவித்துள்ளார். மேலும் குஜராத்தில் உள்ள அகமதாபாத் மைதானத்துக்கு மோடியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. தடுப்பூசி சான்றிதழில் மோடியின் புகைப்படம் இருக்கிறது. இதேபோன்று இந்தியாவிற்கு மோடியின் பெயர் மாற்றப்படலாம் அதற்கு வெகு நாட்கள் இல்லை என்று விமர்சனம் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |