சுவிட்சர்லாந்தில் பொது இடங்களில் பர்தா அணிவதை தடை செய்வதற்கு முன்பாக பொதுமக்களிடம் கருத்து வாக்கெடுப்பு நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2011-ஆம் ஆண்டு பர்தா உள்ளிட்ட முகத்தை மறைக்கும் உடைகளை அணிவதற்கு பிரான்ஸ் நாடு தடை விதித்ததாக சட்டத்தை இயற்றியது. இதனையடுத்து தற்போது சுவிட்சர்லாந்திலும் இதே சட்டத்தை அறிமுகப்படுத்த போவதாகவும், அதற்க்காக பொதுமக்களிடம் கருத்து வாக்கெடுப்பு எடுக்க உள்ளதாகவும் அந்நாட்டு அரசு கூறியிருந்தது.
அதன்படி எடுக்கப்பட்ட வாக்கெடுப்புகளில் 51% மக்கள் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். இதனால் பொது இடங்களில் முழுவதுமாக முகத்தை மறைக்கும் ஆடைகள் அணிவதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. மேலும் கோவில்கள், புனித தலங்களுக்கு மட்டும் இச்சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.