தங்களின் இரவு தூக்கத்தை 15 நிமிடம் குறைத்தால் கூட உடல் பருமன், இதய நோய், சர்க்கரை நோய் போன்ற பல நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது.
நம் உடலில் பல நோய்கள் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் நான் தூக்கத்தை தொலைப்பது தான். ஒருவருக்கு உடல் பருமன் அதிகமாக இருந்தால், அதனை குறைப்பதற்கு உணவில், உடற்பயிற்சியில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். ஆனால் உறக்கத்தை மறந்து விடுகிறார்கள். நாம் தேவையை விட மிகக் குறைவாக தூங்கினால் உடல்நல பாதிப்பு ஏற்படுவது மட்டுமல்லாமல் உடல் எடையை அதிகரிக்கச் செய்யும். பல ஆராய்ச்சியாளர்கள் உடல் எடை மற்றும் தூக்கத்திற்கு என்ன தொடர்பு என்று கண்டறிய பல ஆராய்ச்சிகளை நடத்தினர்.
அந்த ஆய்வில், ஒருவரின் தூக்க நேரம் குறைந்தாலோ அல்லது இரவில் 7 முதல் 8 மணி நேரம் உறக்கம் இல்லாமல் போனாலும் பசியை கட்டுப்படுத்துவது கடினம். அதனால்தான் உடல் பருமன் முதல் இதய நோய், உயர் ரத்த அழுத்தம் மற்றும் டைப் 2 நீரிழிவு வரையிலான கடுமையான நோய்கள் அனைத்தும் வருகின்றன. ஒரு நபர் வெறும் 15 நிமிடங்கள் குறைவாக தூங்கினால் கூட, அவரது எடை இதன் காரணமாக அதிகரிக்கும். ஒரு நபரால் தூங்க முடியாமல் போகும்போது ஹார்மோன் உடலில் அதிகரிக்கிறது.
லெப்டின் பசியை அடக்குகிறது மற்றும் எடையை குறைக்க உதவுகிறது. அதேநேரத்தில் கிரேலின் பசியை அதிகரிக்கிறது மற்றும் எடையை அதிகரிக்கிறது. மேலும் ஒரு ஆய்வில் தங்களின் அன்றாட இரவு தூக்கத்தை ஏழு மணியிலிருந்து 5 மணி நேரமாக குறைத்து அவர்களுக்கு இதயநோயாலும் பிற உடல் நல குறைபாடுகள் காரணமாகவும் உயிரிழக்கும் அபாயம் இரட்டிப்பாகிறது என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். எனவே இரவு நேர தூக்கம் என்பது மிகவும் அவசியம்.