UNICEF குழந்தை திருமணம் பற்றி அதிர்ச்சிகரமான ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
நேற்று சர்வதேச மகளிர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. அப்போது UNICEF ஆய்வறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் இந்தியா, நைஜீரியா, எத்தியோப்பியா, பிரேசில், வங்கதேசம் போன்ற நாடுகளைச் சேர்ந்த குழந்தைகளில் 50 சதவீதம் பேருக்கு சிறுவயதிலேயே குழந்தை திருமணம் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. உலக அளவில் 65 கோடி சிறுமிகளுக்கு குழந்தைப் பருவத்திலேயே திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஆய்வு முடிவுகள் கூறுகிறது.
இதுகுறித்து UNICEF நிர்வாக இயக்குனர் ஹென்றிட்டா ஃபோர் கூறுகையில், ” பள்ளிகள் திறந்த உடன் மக்களுக்கு இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். அந்த விழிப்புணர்வின் மூலம் குழந்தை திருமணத்தை தடுக்க முடியும்” என்று கூறியுள்ளார். இந்தியாவில் இதுகுறித்து 1992 – 1993 மற்றும் 2015 – 2016-ல் ஆண்டுகளுக்கு இடையே கணக்கெடுப்பு நடத்தப்பட்டது . அதில் குழந்தை திருமணம் 54 சதவீதத்திலிருந்து 27 சதவீதமாக குறைந்தது தெரிய வந்தது.
ஆனால், அதற்கு பிறகு மீண்டும் குழந்தை திருமணங்கள் அதிகரித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. ஏன் குழந்தைத் திருமணம் அதிகளவில் நடைபெறுகிறது என்று ஆராய்ச்சியில் ஈடுபட்ட பொழுது குடும்ப வறுமையின் காரணமாகவே அதிகம் நடைபெறுவதாக தெரியவந்துள்ளது. மேலும் பெற்றோருக்கும் இது குறித்த விழிப்புணர்வு இல்லை. இந்நிலையில் குழந்தை திருமணங்களை எப்படியாவது தடுக்க வேண்டும் என்ற முயற்சியில் UNICEF ஈடுபட்டு வருகிறது.