“யோகி டா” படத்தில் தன்ஷிகா பல்டி அடித்து ஆக்ஷன் காட்சியை செய்துள்ளார்.
தமிழ் சினிமாவில் மாஞ்சா வேலு, பேராண்மை, கபாலி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் தன்ஷிகா. இவர் தற்போது இயக்குனர் கௌதம் கிருஷ்ணா இயக்கும் “யோகி டா” படத்தில் நடித்து வருகிறார். மேலும் இப்படத்தில் கபீர் சிங், தயாஜி ஹிண்டே, மனோ பாலா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இப்படத்தில் தன்ஷிகா சில ஆக்ஷன் காட்சிகளையும் செய்துள்ளார். இந்நிலையில் நேற்று இப்படத்திலிருந்து சிறப்பு காட்சி ஒன்று வெளியிடப்பட்டது. பெண்கள் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட இந்தக் வீடியோவில் தன்ஷிகா பல்டி அடிக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
Flip is lot more easier when you do it on the floor,after couple of tries finally get to do the stunt. Training for yogi da choreographed by #ganeshmaster trainer #yogarajkumar Raghu & team@PRO_Priya …. pic.twitter.com/RjLnOSNDek
— சாய் தன்ஷிகா (@SaiDhanshika) March 8, 2021