நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் இன்னும் 10 நாட்களில் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அவர் பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால், கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு கள் அறிவிக்கப்பட்டன.
அதன் பிறகு தற்போது வரை நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வந்தது. அதனால் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். இந்நிலையில் மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், குஜராத், கர்நாடகா மற்றும் தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் மத்திய அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மீண்டும் ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.
இதனை அடுத்து மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அம்மாநிலத்தில் 16 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு விகிதம் 11 சதவீதமாக உள்ளது. இது மாநிலத்தின் சராசரியை விட மிக அதிகம் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அதனால் அதிர்ச்சி அடைந்த மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் முதல்வர் உத்தவ் தாக்கரே உடன் தீவிர ஆலோசனை நடத்தி உள்ளது. அந்த ஆலோசனையில் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பரில் இருந்த நிலை தற்போது உருவாகியுள்ளது. எனவே ஊரடங்கு கட்டுப்பாடுகளை உடனே அமல்படுத்துவது பற்றி ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் அடுத்த 8 முதல் 10 நாட்களுக்குள் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வராவிட்டால், கட்டாயம் ஊரடங்கு அமல் படுத்த வேண்டி இருக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் முககவசம் அணியாதவர்கள், திருமண நிகழ்வுகள், பப்களில் கூட்டத்தை கட்டுப்படுத்த அபராதம் விதிக்கும் பணிகளில் மாநில அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
மேலும் சில நடவடிக்கைகளை எடுத்து கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி நிறுவனங்களில் தனிமைப்படுத்துதல், கொரோனா பரிசோதனைகளை மேலும் அதிகப்படுத்துதல், தடுப்பூசி முகாம்களை விரிவுபடுத்துதல், இறுதியாக பகுதி அளவு ஊரடங்கு என திட்டமிடப்பட்டுள்ளது.