Categories
சினிமா

இணையத்தை கலக்கும் நிவேதா பெத்துராஜ் நடனம்…. வைரலாகும் வீடியோ…!!!

நிவேதா பெத்துராஜ் நடமாடி உள்ள பாடல் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

தமிழ் சினிமாவில் ஒரு நாள் கூத்து, டிக் டிக் டிக், திமிரு பிடிச்சவன் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் நிவேதா பெத்துராஜ். இவர் நேற்று சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் WhattheUff என்ற பாடலுக்கு அவர் நடனமாடியுள்ளார். கு.கார்த்திக் எழுதிய இந்தப் பாடலுக்கு ஜஸ்டீன் பிரபாகரன் இசை அமைத்து ஹரிக நாராயணன் பாடியுள்ளார். மேலும் இந்த கான்செப்ட்டை வெங்கடேஷ் இயக்கியுள்ளார். இந்நிலையில் இந்த பாடல் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Categories

Tech |