Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

எதிரே வந்த கதிர் அறுக்கும் எந்திர வாகனம்… எதிர்பாராமல் உரசிய ஆம்னி பஸ்… விபத்தில் 2 பேர் பலி…!!

கதிரறுக்கும் எந்திர வாகனம் தனியார் பேருந்து மீது மோதியதில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த விஜயாராஜ் என்பவர் தனியார் ஆம்னி பேருந்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் சம்பவம் நடந்த அன்று தனியார் ஆம்னி பேருந்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்னை கோயம்பேட்டில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி ஓட்டி கொண்டு வந்துள்ளார். அந்த பஸ் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே வந்து கொண்டிருக்கும் போது எதிரே வந்த கதிர் அறுக்கும் எந்திர வாகனத்தின் மீது உரசியுள்ளது.

இதனால் நிலை தடுமாறிய ஆம்னி பேருந்து சாலையின் இருபுறங்களிலும் தாறுமாறாக ஓடியுள்ளது. இதனால் விஜயராஜ் பேருந்தை நிறுத்த முயற்சி செய்துள்ளார். ஆனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையின் நடுவே கவிழ்ந்துள்ளது. இதில் பேருந்தில் பயணம் செய்தவர்கள் இடிபாடுகளில் சிக்கி கூச்சலிட்டுள்ளனர். இந்த விபத்தில் பாளையங்கோட்டையை சேர்ந்த வெங்கடேஷ் மற்றும் ராமநாதபுரத்தை சேர்ந்த சரண்யா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.

இந்த விபத்தை கண்ட அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கதிரறுக்கும் வாகனத்தை பறிமுதல் செய்து தப்பிச்சென்ற அதன் டிரைவரை தேடி வருகின்றனர். மேலும் இந்த விபத்து குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |