வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம், செல்போன் உள்ளிட்டவற்றை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கல்லுப்பட்டி கிராமத்தில் பிச்சை என்ற கூலித் தொழிலாளி தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரும் இவருடைய மனைவியும் சம்பவத்தன்று வேலைக்கு சென்றுள்ளனர். மேலும் அவருடைய இரண்டு மகள்கள் பள்ளிக்கு சென்றுள்ளனர். பின்னர் பள்ளி முடிந்ததும் பிச்சையின் மகள்கள் வீடு திரும்பிய போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அதன்பின் அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் வைக்கப்பட்டு இருந்த 8 பவுன் நகை, வெள்ளி கொலுசு, 20,000 பணம், ஒரு செல்போன் ஆகியவை திருடு போனது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அவர்கள் பிச்சையிடம் தெரிவித்துள்ளனர். உடனடியாக பிச்சை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்