கோவையில் சந்தனகட்டைகளை கடத்த முயன்றவர்கள் தப்பி ஓடியதையடுத்து, அவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
கோவை தடாகம் சாலையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பொழுது சந்தேகத்துக்கிடமாக வந்த காரை நிறுத்த காவல் துறையினர் முற்சித்தனர். ஆனால் கார் நிற்காமல் வேகமாக சென்றதால் காவல்துறையினர் துரத்திச் சென்றபோது,வடவள்ளி அருகே காரை நிறுத்திவிட்டு இருவர் தப்பி ஓடியுள்ளனர்.காரை சோதனையிட்ட போது சந்தன மரக்கட்டைகளை கடத்த முயன்றது தெரியவந்தது.
சந்தன மரக்கட்டைகள் மற்றும் அவற்றை அறுக்க உபயோகிக்கப்பட்ட உபகரணங்களை காருடன் பறிமுதல் செய்த காவல்துறையினர்,அவற்றை கோவை சாய்பாபா காலனி காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர்.இந்நிலையில் காவல்துறையினர் விசராணை மேற்கொண்ட போது கோவை சாய்பாபா காலனியில் உள்ள முருகன் பஞ்சாலை குடியிருப்பு வளாகத்தில் மூன்று சந்தன மரங்களை வெட்டி கடத்தப்பட்டு உள்ளது கண்டறியப்பட்டது. மேலும் கடத்தல்காரர்கள் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருவதாக என காவல்துறையினர் தெரிவித்தனர்.