நடிகர் ரஜினிகாந்துடன் நடிகர் ராகவா லாரன்ஸ் சிறு வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிக்கு ரசிகர்கள் ஏராளம். இவர் நடிப்பில் ‘அண்ணாத்த’ படம் தயாராகி வந்தது . இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகி வந்த இந்த படத்தில் குஷ்பு, மீனா ,நயன்தாரா, கீர்த்தி, சூரி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். ஹைதராபாத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றபோது சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்துடன் நடிகர் ராகவா லாரன்ஸ் சிறுவயதில் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. நடிகர் ராகவா லாரன்ஸ் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மிகப்பெரிய ரசிகர் என்பதை அவரே பல மேடைகளில் கூறியுள்ளார். தற்போது ரஜினியை கட்டி அணைத்தவாறு சிறுவயதில் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.