உலகில் இந்தியா உட்பட ஐந்து நாடுகளில் தான் குழந்தை திருமணங்கள் அதிகளவில் நடைபெறுவதாக யுனிசெப் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.
குழந்தை திருமணங்கள் இந்தியா உட்பட 5 நாடுகளில் பாதிக்குமேல் நடைபெறுவதாக யுனிசெப் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது .இதுவரை 65 கோடி சிறுமிகளும் ,பெண்களும் குழந்தைப் பருவத்தில் திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது. அதில் பாதிப்பேர் எத்தியோப்பியா, இந்தியா ,வங்காளதேசம், பிரேசில் மற்றும் நைஜீரியாவில் உள்ளவர்கள் .உலக அளவில் கடந்த 10 ஆண்டுகளில் குழந்தைகள் திருமணம் 15 % குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. கிட்ட தட்ட 4 ல் 1 ல் இருந்து 5 ல் 1ஆக இருந்தது. 2.5 கோடி திருமணங்களுக்கு இது சமமானதாகும்.
ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளதாவது, துணை சஹாரா ஆப்பிரிக்காவில் குழந்தை திருமணத்தின் அளவு மிக அதிகமாக இருப்பதாகவும், 35 % இளம் பெண்கள் 18 வயதிற்கு முன்பே திருமணம் செய்து கொள்வதாகவும் கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து 30% பெண்கள் 18 வயதிற்கு முன்பே தெற்காசியாவில் திருமணம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் சுமார் 24 % குழந்தை திருமணம் லத்தீன், அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளிலும், 17 %குழந்தைத் திருமணங்கள் மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவிலும் நடைபெறுகின்றது.
மேலும் அந்த அறிக்கையில் 12 % குழந்தை திருமணங்கள் ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவில் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை வெளியானதை தொடர்ந்து பல சமூக ஆர்வலர்கள் இது இந்தியாவுக்கு ஏற்பட்ட அவமானம் என்று கருத்தை தெரிவித்து வருகின்றனர்.