தமிழகத்தில் கேஸ் சிலிண்டர் விலையை குறைக்க முடியாத அதிமுக அரசால் எப்படி 6 சிலிண்டர் இலவசமாக கொடுக்க முடியும் என டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி அதிமுக கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது. மேலும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் விருப்ப மனு தாக்கல் செய்து வருகிறார்கள். இதனையடுத்து ஒவ்வொரு கட்சியினரும் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பற்றி தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். அதிலும் சில காட்சிகளில் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது.
தங்களுக்கு உரிய தொகுதி ஒதுக்காததால் கூட்டணியில் இருந்து பிரிந்து சென்று வேறு கட்சியுடன் கூட்டணி அமைத்து வருகின்றன. அதன்படி அதிமுக கட்சியில் இருந்து பலரும் விலகிச் சென்று திமுக போன்ற பல கட்சிகளின் கூட்டணி வைத்துள்ளனர். அதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் ஒரு ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் இலவசமாக கொடுக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவிப்பு வெளியிட்டார். மேலும் இல்லத்தரசிகளுக்கு 1,500 ரூபாய் ஊதியம் வழங்கப்படும் எனவும் அறிவித்தார். ஆனால் கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் சிலிண்டர் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த 2 மாதத்தில் மட்டும் 250 ரூபாய் சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது. அதனால் பொதுமக்கள் அனைவரும் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் கேஸ் சிலிண்டர் விலையை கூட குறைக்க முடியவில்லை, பின்னர் எப்படி ஆண்டுக்கு ஆறு சிலிண்டர்கள் இலவசமாக கொடுக்க முடியும் என்று டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் தேர்தல் அறிக்கையின் மூலம் மக்களை அமமுக ஏமாற்ற விரும்பவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.