பிரிட்டன் இளவரசர் ஹரி அரசு குடும்பத்திலிருந்து வெளியேறிய பின்னர் தமது தாயாரின் பணத்திலேயே வாழ்க்கையை சமாளித்ததாக கூறியுள்ளார்.
பிரிட்டன் இளவரசர் ஹரி -மேகன் தம்பதியினர் அரச குடும்பத்தில் இருந்து வெளியேறிய பின்னர் தங்களுக்கு நடந்த சோதனைகளை பற்றி தொலைக்காட்சி ஆளுமை ஓப்ரா வின்ஃப்ரேயுடனான பேட்டியில் பேசியுள்ளனர். அந்தப் பேட்டியில் பல திடுக்கிடும் உண்மைகளை வெளியிட்டனர். அதில் அரச குடும்பத்திலிருந்து வெளியேற்றப்பட்ட இளவரசர் ஹரி -மேகன் தம்பதியினர் பொருளாதார ரீதியாக ஒதுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
அதற்குப் பின் தாயார் டயானாவின் சொத்திலிருந்து வாழ்க்கையை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார். ஒருவேளை தாயாரின் சொத்து இல்லாவிட்டால் தமது நிலை என்னவாகியிருக்கும் என்றும் கூறியுள்ளார் .இளவரசி டயானா 1997 ஆகஸ்ட் மாதம் சாலை விபத்தில் கொல்லப்படும் போது அவரிடமிருந்த சொத்துகளின் மதிப்பு 12,966,022 பவுண்டுகள் இருந்த நிலையில் இளவரசி டயானாவின் இறுதி சடங்கிற்கு பின்பு மிஞ்சிய தொகை 8,502,330 பவுண்டுகள் ஆகும் .
ஆனால் இந்தத் தொகை அரண்மனையின் ஆலோசகர்களின் புத்திசாலித்தனத்தால் இன்னும் 20 மில்லியன் பவுண்டுகளாக அதிகரித்தது .இந்த தொகையை டயானாவின் இரு மகன்களுக்கும் சரிபாதியாக அளிக்கப்பட்டது. அதில் ஒரு பாதியை ஹரி தனது 25 வயதிற்கு பின்பும் எஞ்சிய தொகையை 30 வயதிற்கு மேல் பயன்படுத்தவும் டயானா உயிலில் குறிப்பிட்டுள்ளார் .இந்த பணத்தையே ஹரி மற்றும் மேகன் தம்பதியினர் அரச குடும்பத்தை விட்டு வெளியேறிய பின்னர் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.