தங்கம் என்றாலே அனைவரும் ஆசைப்படும் ஒரு பொருளாகவும், அதிகமாக முதலீடு செய்யும் பொருளாகவும் மாறிவிட்டது. இந்நிலையில் தங்கம் விலை ஏறிக் கொண்டே போனாலும் தங்கத்தின் மீதான மோகம் மக்களுக்கு இன்னமும் குறையவில்லை. இவ்வாறு தங்கத்தை அதிக விலை கொடுத்து வாங்கும் நிலையில், காங்கோ நாட்டில் தெற்கு கியூ மாகாணத்தில் உள்ள லூஹி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஒரு பெரிய மலையில் தங்கம் நிறைந்த மணல் காணப்பட்டிருக்கிறது. இதை அறிந்த அந்த பகுதியில் உள்ள மக்கள் கோடாரி, கடப்பாரை கொண்டு சென்று அந்த மலையை குடைந்து தங்கம் நிரம்பிய மணலை போட்டி போட்டுகொண்டு எடுத்துச் சென்றுள்ளனர்.
இதை அறிந்த அதிகாரிகள் அந்த பகுதிக்கு சென்று மக்களை அங்கிருந்து வெளியேறியுள்ளனர். மேலும் தங்கத்தை சுரண்டி எடுப்பதற்கும் தடை விதித்துள்ளனர். மேலும் அந்த மலை முழுவதும் 60 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை தங்கத்தால் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. எனவே மலையை சுற்றி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. மேலும் மக்கள் யாரும் இந்த பகுதியில் நெருங்காதவாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தங்கம் நிறைந்த மணலை எடுத்து சென்ற மக்கள் அதை பிரித்தெடுக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.