காஞ்சிபுரத்தில் மகளிர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாக்குச்சாவடி மையம் பிங்க் பூத்தாக மாற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடைபெறவிருக்கிறது. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் 100% வாக்களிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லியில் மகளிர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி அறிஞர் அண்ணா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் பெண்களை போற்றும் வகையில் வாக்குச்சாவடி மையம் பிங்க் பூத்தாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் நடத்தும் அதிகாரி ப்ரீத்தி பார்கவி இந்த வாக்கு பதிவு மையத்தை திறந்து வைத்துள்ளார். கட்டிடம் முழுவதும் இளஞ்சிவப்பு நிறம் வண்ணம் தீட்டப்பட்டு பலூன்கள் தொங்கவிடப்பட்டு இருந்துள்ளது. இந்த பூத்திற்க்கு தேர்தல் பணியாளர்கள் இளஞ்சிவப்பு நிற புடவை அணிந்து வந்துள்ளனர். 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் இந்த நிகழ்ச்சியை நடத்தியுள்ளது.