தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து ,அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கமலஹாசன் மக்கள் நீதி நான்காவது தொடக்க விழாவில் விட்டுக் கொடுத்தால் தான் அரசியல். இளமையாக இருக்கும்போதே அரசியல் செய்து விட்டு பின்னர் அமைதியாக இருக்க வேண்டும். இப்போது எனக்கு 60 வயது ஆகிறது. இன்னும் ஒரு 5 வருடம் மக்களுக்கு சேவை செய்யவேண்டும். அதுக்கப்புறம் ஒரு ஐந்து வருடம். அதன்பின்னர் சக்கர நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு மக்களை தொந்தரவு செய்யமாட்டேன் என்று கூறினார்.
இந்த கருத்தானது கலைஞர் கருணாநிதியை தான் ஸ்டாலின் சாடி இருக்கிறார் என்று பலரும் கண்டனம் தெரிவித்தும், கமல் அதற்கு மன்னிப்பு கேட்குமாறும் குரல் எழுப்பி வந்த நிலையில் அதற்கு விளக்கம் அளித்த கமல், “தான் கருணாநிதி குறித்து பேசவில்லை என்றும் என்னுடைய சக்கர நாற்காலி, என்னுடைய முதுமையை பற்றி தான் பேசினேன் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் கருணாநிதியை அவமானப்படுத்த வேண்டும் என்றால் ஸ்டாலின் பெயரை சொன்னாலே போதும் என்று கூறியிருப்பது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.