Categories
அரசியல் மாநில செய்திகள்

என்னுடைய ஆட்சியில்…. பாலியல் குற்றத்தில் ஈடுபட்டால்…. குற்றவாளியை முதலில் கொலை செய்வேன் – சீமான் ஆவேசம்…!!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதுயடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. அதிமுகவினரும், திமுகவினரும் ஒருவரையொருவர் குறைகூறிக்கொண்டு விமர்சனம் செய்து மோதல் போக்கில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிட உள்ளது. இதில் 117 ஆண் வேட்பாளர்களையும், 117 பெண் வேட்பாளர்களையும் சென்னையில் அறிமுகம் செய்து வைத்தார். இதையடுத்து திருவொற்றியூர் பகுதியில் சீமான் வேட்பாளராக போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் அங்கு பிரச்சாரம் செய்த அவர், “பெண்களிடம் பாலியல் அத்துமீறல், ஆசிட் வீச்சில் போன்ற பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் என்னுடைய ஆட்சியில் உயிரோடு இருக்கமாட்டார்கள். பாலியல் பலாத்காரம் செய்யபட்ட பெண்ணின் உடல் அடக்கம் செய்வதற்கு முன்னர் குற்றவாளியை கொலை செய்த பின்னர்தான் நல்லடக்கம் செய்யபடும் என்றும் பெண்களிடம் அத்துமீறிபவர்களுக்கு இதுவே என்னுடைய ஆட்சியில் தண்டனை என்றும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |