Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை சுத்திகரிக்க உதவும் காளானில்… எளிதில் சளி, இருமலை விரட்டக்கூடிய ரெசிபிய செய்து அசத்துங்க..!!

பெப்பர் காளான் செய்ய தேவையான பொருட்கள்:

காளான்                        –  250 கிராம்(நறுக்கியது)
எண்ணெய்                  – தேவையான அளவு
கடுகு                              – அரை ஸ்பூன்
பச்சை மிளகாய்        – 2
வத்தல்                          – 2
இஞ்சி                             – சின்ன துண்டு
பூண்டு                            – 5 பல்
கருவேப்பிலை          – தேவையான அளவு
பெரிய வெங்காயம் – 2(பொடியாக நறுக்கியது)
குடை  மிளகாய்         – 2 நறுக்கியது
சோம்பு                           – ஒரு  ஸ்பூன்
மிளகு                             – இரண்டு ஸ்பூன்
சீரகம்                              – ஒரு  ஸ்பூன்
உப்பு                                – தேவையான அளவு

செய்முறை:

முதல்ல மிக்சிஜாரில் சோம்பு, மிளகு, சீரகத்தை போட்டு நல்லா மையாக பொடி போல அறைச்சி எடுத்துக்கணும்.   பிறகு காளானை எடுத்து தண்ணீர்ல நல்லா சுத்தம் பண்ணிட்டு, அதனுடன் பெரிய வெங்காயம்,குடை மிளகாய், இஞ்சி, பூண்டை போடி பொடியாக நறுக்கி எடுத்துக்கணும்.

நான்சிடிக் தவாவை அடுப்புல வச்சி, எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, நறுக்கி வச்ச இஞ்சி, பூண்டு, நறுக்கிய வெங்காயத்தை போட்டு நல்லா சிவக்க வதக்கினபிறகு, நறுக்கி வச்ச காளானை சேர்த்து, நன்கு வதக்கின பிறகு நறுக்கிய குடைமிளகாயை சேர்த்ததும், அரைச்சி வச்ச சீரக கலவையை போட்டு நல்லா கிளறி விட்டு வாசனை வந்ததும் இறக்கிக்கணும்.

மேலும் கிளறிவிட்ட கலவையில், காளான் வேகுற அளவுக்கு லேசாக தண்ணீர் சேர்த்து, தேவைக்கேற்ப உப்பு தூவியதும், முடி வச்சி 15 நிமிடம் நல்லா வெந்து கெட்டியான பிறகு இறக்கிக்கிடனும்.

பிறகு அடுப்புல கடாயை வச்சி எண்ணெய் ஊற்றி சூடானதும், காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், கருவேப்பிலை போட்டு தாளித்ததும் இறக்கி, வதக்கிய காளானுடன் சேர்த்து கிளறி விட்ட பிறகு இறக்கி பரிமாறினால் ருசியான பெப்பர் காளான் வறுவல் ரெடி.

Categories

Tech |