Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தேர்தலை முன்னிட்டு… நாகையில் ராணுவ படை கொடி அணிவகுப்பு… போலீஸ் சூப்பிரண்டு தலைமை..!!

மயிலாடுதுறையில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ராணுவ வீரர்கள் மற்றும் காவல்துறையினர் கொடி அணிவகுப்பு நடத்தியுள்ளனர்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் ராணுவ வீரர்கள் கொடி அணிவகுப்பு மேற்கொண்டு வருகின்றனர். வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ராணுவ வீரர்கள் பாதுகாப்பிற்காக வருகை தந்துள்ளனர். அதன்படி குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையிலும், செம்பனார் கோவிலில் உள்ள பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையிலும் காவல்துறையினர் மற்றும் ராணுவ வீரர்கள் கொடி அணிவகுப்பு நடத்தியுள்ளனர்.

இந்த அணிவகுப்பிற்கு துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை தலைமை தாங்கியுள்ளார். இந்த அணிவகுப்பில் மயிலாடுதுறை காவல்துறை ஆய்வாளர் சிங்காரவேலு உள்ளிட்ட 60 காவல்துறையினரும், 40 துணை ராணுவ வீரர்களும் மொத்தம் 100 பேர் கலந்து கொண்டுள்ளனர். இந்த கொடி அணிவகுப்பு செம்பனார்கோவில் பகுதியில் உள்ள கடைவீதியில் துவங்கி பரசலூர் ஊராட்சி வரை முக்கிய வீதிகள் வழியாகச் சென்று பழைய பேருந்து நிலையத்தில் முடிவடைந்துள்ளது.

Categories

Tech |