Categories
தேசிய செய்திகள்

எங்க அப்பா யாரு..? தாயிடம் மகன் கேட்ட கேள்வி… கேள்விக்கு விடை தேடி போராடும் தாய்..!!

தனது தந்தை யாரென்று ஒரு தாயைப் பார்த்து மகன் கேட்டுள்ளார். அந்த கேள்விக்கு விடை தேடி தாய் போராடி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

1994-ஆம் ஆண்டு 12 வயது பெண் ஒருவர் தனது அக்காள் கணவருடன் உத்தரப்பிரதேசத்தில் வாழ்ந்து வந்துள்ளார். அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த அண்ணன் தம்பி இருவரும் அச்சிறுமியை கற்பழித்துள்ளனர். மேலும் பல முறை அந்த சிறுமியை கற்பழித்துள்ளனர். இதனால் அச்சிறுமி கர்ப்பமாகி அவருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. பின்னர் அந்த சிறுமியின் அக்கா குழந்தையை உதம்பூரில் உள்ள ஒருவருக்கு கொடுத்துவிட்டார்.

பிறகு அக்கா கணவருக்கு பணியிடமாற்றம் கிடைத்ததால் அவர்களுடன் சேர்ந்து சென்றுவிட்டார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அச்சிறுமிக்கு அவரின் அக்கா கணவர் வேறு ஒருவருக்கு திருமணம் செய்து கொடுத்தார். அதிலும் அச்சிறுமி கற்பழிக்கப்பட்டதை தெரிந்த அவரின் கணவர்  விவாகரத்து செய்துவிட்டார்.  பின்னர் சொந்த ஊரான உதம்பூர் அருகே வந்து விட்டார். அந்த ஆண் குழந்தை தனது தந்தை மற்றும் தாயை தேடி அலைந்த பிறகு இந்தப் பெண் தான் தாய் என்று அறிந்து அவரை சந்தித்துள்ளார்.

அவரிடம் தனது தந்தை யார் என்று அந்த மகன் கேட்கவே அப்பெண் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் போலீஸில் பக்கத்துவீட்டுக்காரன் ஆன அண்ணன் தம்பி இருவர் மீதும் புகார் அளித்தார். ஆனால் போலீசார் இந்த புகாரை ஏற்க மறுத்தன.ர் இதையடுத்து கோர்ட் வழியாக தனது சட்டப் போராட்டத்தைத் தொடங்கினார். இதையடுத்து கோர்ட்டு உத்தரவின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது.  அந்த அண்ணன் மற்றும் தம்பி ஆகியோருக்கு டிஎன்ஏ பரிசோதனை நடத்தவும் முடிவு செய்துள்ளது. இந்த முடிவில் அந்த ஆண் குழந்தையின் தந்தை யார் என்பது தெரியவரும்.

Categories

Tech |