Categories
உலக செய்திகள்

அது வேற வைரஸ்… இது வேற வைரஸ்… இத்தாலியில் கண்டறியப்பட்ட புதுவகை கொரோனா…!!

இத்தாலியில் தாய்லாந்தின் உருமாறிய கொரோனா வைரஸ் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலக நாடுகள் கொரோனா வைரசால்  மிகுந்த பாதிப்புக்குள்ளாகி விட்டது. இதற்கிடையில் உருமாறிய கொரோனா வைரசால்  பிரிட்டன் போன்ற நாடுகளில் அதிகளவு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இத்தாலியில்  இதுவரை இல்லாத உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகிலேயே அதிக அளவு கொரோனா  வைரஸால் பாதிக்கப்பட்ட  நாடுகளின் பட்டியலில் 8வது இடத்திலிருக்கும் இத்தாலியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 13,902 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

இதுவரை இத்தாலியில் 30,81,368 பேர்  கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒரே நாளில் 318 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,00,103 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளில் இதுவரை இல்லாத அளவிற்கு தாய்லாந்தின் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் இத்தாலியில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இந்த வைரஸ் எகிப்திலிருந்து இத்தாலிக்கு திரும்பிய நபரிடமிருந்து அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த உருமாறிய கொரோனா வைரஸ் குறித்து இத்தாலி சுகாதார அமைப்புகள் ஆய்வு செய்து வருகின்றன.

Categories

Tech |