Categories
உலக செய்திகள்

அடுத்த ரவுண்டுக்கு ரெடியான கொரோனா…! மீண்டும் ஊரடங்கு போட்டு நடவடிக்கை ..!!

ஈராக் நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்ததால் அடுத்த 2 வாரங்களுக்கு ஊரடங்கு என அரசு தெரிவித்துள்ளது.

உலகெங்கிலும் கொரோனாதொற்று அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்தும் முயற்சியில் முழு உலக நாடும் செயல்பட்டு வருகின்றது. ஈராக்கில் பரவி வரும் வைரஸை கட்டுப்படுத்த அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் , அடுத்த இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் மீண்டும்  ஊரடங்கு நீடித்து விட உத்தரவிட்டுள்ளது. மேலும் பொது முடக்கம் மார்ச் 9 முதல் 22 வரையிலும், முழு ஊரடங்கு  வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும், மற்ற நாட்களில் இரவு 8 மணி முதல் மறுநாள் காலை 5 மணி வரை ஊரடங்கு விட உத்தரவு  அறிவித்துள்ளது என்று அந்நாட்டு  அரசு தகவல் தெரிவித்துள்ளது.

Categories

Tech |