நாடாளுமன்ற அவைக்கு எம்.பி. நரேந்திரர் ஜாதவ் உயர் திறன் கொண்ட நவீன முககவசத்தை அணிந்து வந்த சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
நாடாளுமன்றதில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 29ஆம் தேதி அன்று குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கப்பட்டது. இந்த கூட்டத்தொடரில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021 – 22 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். இதனையடுத்து நாடாளுமன்றத்தின் இரண்டாம் கட்ட கூட்டுதொடர் மார்ச் 8 அன்று நடைபெற்றுள்ளது. இந்நிலையில் நாடாளுமன்ற அவைக்கு வந்த எம்.பிக்கள் முக கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை பின்பற்றியும் கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ளனர்.
அந்த வகையில் மாநிலங்களவை எம்.பி. நரேந்திர ஜாதவ் உயர் திறன் கொண்ட ஏர் பில்டர் மாஸ்க் அணிந்து வந்துள்ளார். இந்த மாஸ்க் ஆனது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. மேலும் இதுகுறித்து அவர் 99% கிருமிகளை தடுக்கும் திறன் கொண்ட நவீன முககவசம் என்று கூறியுள்ளார்.