Categories
சினிமா தமிழ் சினிமா

இளைஞர்களுக்கு உதாரணமாக இருக்கும் அஜித்…. மேலும் சாதனை புரிய சீமான் வாழ்த்து….!!

துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற அஜித்திற்கு சீமான் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்பவர் அஜித். இவர் நடிப்பில் மட்டுமின்றி பைக் ரேஸ், கார் ரேஸ், போட்டோ கிராபி, ஆளில்லா சிறிய ரக விமானம் தயாரித்தல்,மாணவர்களுக்கு ட்ரோன் பயிற்சி அளித்தல் உள்ளிட்ட திறமைகளையும் கொண்டுள்ளார். அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார்.

துப்பாக்கி சுடும் போட்டியில் மாஸ் காட்டிய அஜித் - Shooting champion : Ajith go to next level

இதற்கிடையில் அவ்வப்போது சென்னை ரைஃபிள் கிளப்பில் துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் தமிழ்நாடு மாநில 46வது துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்றது. அதில் பங்கேற்ற 6 பதக்கங்களை வென்றுள்ளார். இதனை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தங்கப்பதக்கம் வென்றார் நடிகர் அஜித்! | nakkheeran

 

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அஜித்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,”சென்னையில் நடைபெற்ற 46-வது தமிழ்நாடு மாநிலத் துப்பாக்கி சுடுதல் முதல்நிலைப் போட்டியில் ‘சென்னை ரைஃபிள் கிளப்’ அணிக்காக தம்பி அஜித்குமார் அவர்கள் பங்கேற்று 6 பதக்கங்களை வென்ற செய்தியறிந்து பெருமகிழ்ச்சி அடைந்தேன்.

உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டி - சீமான் பேட்டி||In local  elections Naam Tamilar Katchi competition Seeman Interview -DailyThanthi

தம்பி அஜீத் திரைப்பட நடிகராக மட்டுமின்றி, துப்பாக்கி சுடுதல் , இரண்டு, நான்கு சக்கர வாகனப் பந்தயங்களில் பங்கெடுத்தல், நவீன எந்திரப் பொறிகளை உருவாக்குதல் உள்ளிட்டப் பன்முகத்திறமைகளைக் கொண்டவராக விளங்குவது பாராட்டுக்குரியது.

இன்றைய இளைய தலைமுறையினர் ஒவ்வொருவரும் தனது தனித்திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்கேற்பத் திகழும் தம்பி அஜீத் அவர்கள் தொடர்ந்து மேலும் பல சாதனைகளைப் புரிய எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்!”என்று கூறியுள்ளார்.

 

Categories

Tech |