பெரம்பலூரில் 100% வாக்களிக்க வேண்டும் என்று மகளிர் சுய உதவிக்குழுவினர் ரங்கோலி கோலம் போட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 100 சதவீதம் வாக்களிக்க வேண்டுமென்று பல்வேறு மாவட்டங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி வாக்காளர்கள் உறுதிமொழி ஏற்பு கையெழுத்து இயக்கம், மகளிர் சுய உதவிக்குழு மூலம் ரங்கோலி கோலம் வரைதல் போன்ற நிகழ்ச்சிகள் பெரம்பலூரில் நேற்று நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ஸ்ரீ வெங்கடபிரியா தலைமை தாங்கியுள்ளார். மாவட்ட ஆட்சியர் 100 சதவீதம் வாக்குப்பதிவு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, பதாகையில் கையெழுத்திட்டு இயக்கத்தைத் தொடக்கி வைத்துள்ளார். இதையடுத்து மகளிர் சுய உதவிக் குழுவினர் ரங்கோலி கோலமிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தியதை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டுள்ளார். இதையடுத்து கலெக்டர் அலுவலக ஊழியர்கள் 100% சட்டமன்ற தேர்தலில் வாக்களிப்போம் என்ற உறுதிமொழியை மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஏற்றுக்கொண்டனர்.