அதிமுக கூட்டணியில் தொகுதி உடன்பாடு எட்டாததால் தேமுதிக அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தது. இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்த மகன் விஜய்பிரபாகரன், இனி மக்களும் தெய்வங்களோடு தான் கூட்டணி. மக்கள் நீதி மையம், அமமுகத்தை தேடி நாங்கள் ஏன் போகணும் ? அவங்க எங்களை தேடி வரணும். நாங்கள் தான் அரசியலில் சீனியர் எனவே அவர்கள் எங்களை தேடி வரணும். எங்களை பொறுத்தவரை முதல்வர் வேட்பாளருக்கு கேப்டன் தான் என்று நம்பி நாங்க போயிட்டு இருக்கோம் என விஜய் பிரபாகரன் தெரிவித்தார்.
Categories