Categories
உலக செய்திகள்

அமெரிக்க மக்களே தடுப்பூசி போட்டாச்சா…? அப்படினா நீங்க இதெல்லாம் தாராளமா பண்ணலாம்… வழிகாட்டுதல் வெளியீடு…!!

அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கான வழிகாட்டுதலை அந்நாட்டு நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரசால்  உலக நாடுகள் பெரும் பாதிப்புக்குள்ளாகி விட்டது. இதனால் உலக நாடுகள் கொரோனா வைரஸை எதிர்க்கும் விதமாக தங்கள் நாட்டு குடிமக்களுக்கு தடுப்பு செலுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனா வைரசுக்கு எதிராக முழுமையான தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் என்னென்ன செய்யலாம்? என்றும் எவற்றையெல்லாம் செய்யக்கூடாது? என்றும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் சில வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

அதில் கொரோனா வைரசுக்கு எதிரான முழுமையான தடுப்பூசியைப் போட்டுக் கொண்ட ஒருவர்  மற்றொரு தடுப்பூசி போட்டுக் கொண்டவருடன் உரையாடும் பொழுது முகக்கவசம் அணிய தேவை இல்லை. மேலும் சமூக இடைவெளியையும் பின்பற்ற வேண்டாம். ஆனால் தடுப்பூசி போடாத நபரிடம் பேசுவதற்கு சில விதிமுறைகள் உள்ளது.  அது என்னவென்றால் தடுப்பூசி போட்டு கொண்டவர், தடுப்பூசி போடாத ஒரே குடும்பத்தை சேர்ந்த நபர்களிடம் உரையாடும் பொழுது முக கவசம் அணிய வேண்டாம். சமூக இடைவெளியை  பின்பற்றவும் தேவை இல்லை. ஆனால் அந்த குடும்பத்தினர் நோய் எதிர்ப்பு சக்தி உடையவர்களாக இருக்க வேண்டும்.

மேலும் கொரோனா வைரசுக்கு எதிரான முழுமையான தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் கொரோனா பாதித்த நபர்களிடம் பழகினாலும் தங்களைத் தனிமைப் படுத்திக் கொள்ள வேண்டாம். கொரோனா  பரிசோதனை செய்யவும் தேவையில்லை. ஆனால் 14 நாட்களுக்கு தங்களுக்கு கொரோனா அறிகுறிகள் ஏதேனும் இருக்கிறதா என்பதை மட்டும் கவனிக்க வேண்டும்.  இந்நிலையில், கொரோனா தடுப்பூசியின்  பாதுகாப்பு காலம் எவ்வளவு? என்பதை விஞ்ஞானிகள் கண்டறிவதற்கு முயற்சி செய்து வருகின்றனர் என்று அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையம் கூறியுள்ளது.

Categories

Tech |