சென்னையில் தேர்தல் விதிமீறல் தொடர்பாக 29 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தின் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த 28ஆம் தேதி முதல் பல்வேறு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. இந்நிலையில் தேர்தல் நடத்தைவிதிமுறைகளை மீறுவோர் மீது தேர்தல் கண்காணிப்பு குழு அலுவலர்கள் மற்றும் பறக்கும் படையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்கள், பணம் வழங்கப்படுகின்றதா ? என்பதையும் கண்காணித்து வருகின்றனர்.
இதனைத்தொடர்ந்து சென்னையில் தேர்தலின்போது எந்தவித குற்றங்களும் நிகழாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் உரிமம் பெற்ற துப்பாக்கிகளை காவல்துறையினரிடம் ஒப்படைக்கவும் உத்தரவிட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து கடந்த 28 ஆம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிகளை மீறிய குற்றத்திற்காக 29 வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், பணம் மற்றும் விலையுயர்ந்த பொருள்கள் கொண்டு சென்றதற்காக 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல் துறையினர் அறிவித்துள்ளனர்.
மேலும் இதுவரை 1622 உரிமம் பெற்ற துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் 1104 ரவுடிகளிடம் ஆறு காலத்திற்கு எந்தவித குற்றங்களில் ஈடுபடாமல் இருக்க பிரமாண பத்திரத்தில் கையெழுத்து பெற்றுள்ளதாகவும் சென்னை காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.