Categories
உலக செய்திகள்

51நாள் ஆச்சு… யாருக்கும் கொரோனா இல்லை… மகிழ்ச்சியான ஆஸ்திரேலியா…!!

கொரோனா தொற்று ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து 10 நாட்களில் யாருக்கும் புதிதாக பரவவில்லை என்ற மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது .

ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து 10 நாட்களாக கொரோனா பரவவில்லை என்றும் அதிலும், நியூ சவுத் வேல்ஸ் எனும் பகுதியில் தொடர்ந்து 51  நாட்களாக ஒருவருக்கு கூட கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் 11 நாட்களாக விக்டோரியா மாகாணத்தில் ஒருவருக்கு கூட புதிதாக கொரோனா கண்டறியவில்லை என்றும்  டாஸ்மேனியா, வடக்கு மாகாணம், தெற்கு ஆஸ்திரேலியா மற்றும் ஆஸ்திரேலியா தலைநகரம் ஆகிய பகுதிகளிலும் ஒருவருக்கு கூட புதிதாக கொரோனா கண்டறியப்படவில்லை என்றும்  கூறப்படுகிறது .

மேற்கு ஆஸ்திரேலியாவில் மட்டும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |