Categories
உலக செய்திகள்

மீண்டும் வெடிக்கும் போராட்டம் ? நீதிமன்றத்தில் நடந்த முக்கிய வழக்கு – வீதியில் இறங்கிய மக்கள் …!!

அமெரிக்காவில் நிறவெறி தாக்குதலுக்கு எதிராகவும், சார்ஜ் பிளாய்டு மரணத்துக்கு நீதி கேட்டு மீண்டும் போராட்டம் நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மே மாதம் 25ம் தேதி 46  வயதான ஜார்ஜ்  பிளாய்ட் என்ற கறுப்பினத்தவர் அமெரிக்காவின் மினிசோட்டா மாகான தலைநகரில் உள்ள மின்னெபொலிஸிஸ்ஸில், காவல்துறையால் கழுத்து நெரிக்கப்பட்டு உயிரிழந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிய நிலையில், ஜார்ஜ்ஜை கொலை செய்தவர் டெரோக் சாவ் என்றும், அவர் ஜார்ஜ்  பிளாய்ட்டை கீழே  தள்ளி  கழுத்தில் தன் முட்டியை  வைத்து அழுத்தி கொலை  செய்தது அம்பலமாகி அமெரிக்காவை போராட்ட களமாக்கியது.

இந்த துயர சம்பவத்துக்கு எதிராக அமெரிக்கா முழுவதும் போராட்டங்கள் வெடித்தது மட்டுமின்றி,  சர்வதேச அளவில் அதிர்ச்சியையும்  ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கு அமெரிக்காவில் தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கும் நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய முன்னாள்  காவலரிடம்  மினிசோட்டா பகுதியில் உள்ள நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. இதனால் நீதிமன்றத்திற்கு வெளியே ஜார்ஜ் மரணத்திற்கு நீதி கேட்டு மக்கள் போராட்டம் நடத்தினர். இதில் நிற வெறி தாக்குதலுக்கு எதிராக கோஷங்களையும் மக்கள் முன் வைத்தனர்.

Categories

Tech |