Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக, அதிமுக மக்களின் எதிரிகள்…. எனக்கும் அவர்கள் எதிரி தான் – கமல் கடும் விமர்சனம்…!!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையமும் தேர்தலுக்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் அதிமுகவினர் மற்றும் திமுகவினர் குறை கூறிக்கொண்டு விமர்சனம் செய்து மோதல் போக்கில் ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன் மக்களுடைய தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். மேலும் கூட்டணி குறித்த குழப்பமும், தொகுதி பங்கிடுவதில் இழுபறியும் நீட்டித்து வருகிறது.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் நாளை காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும் என்று கமலஹாசன் கூறியுள்ளார். மேலும் திமுக மற்றும் அதிமுக இரண்டு கட்சிகளுமே தோற்கடிக்க வேண்டிய கட்சிகள்தான். ஏற்கனவே ஆட்சியில் இருந்த ஸ்டாலின், தற்போது ஆட்சியிலிருக்கும் பழனிசாமி என்று அனைவரையுமே நான் விமர்சிப்பேன். மக்களுக்கு எதிரியான அனைவரும் எனக்கும் எதிரி தான் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |