Categories
அரசியல் மாநில செய்திகள்

FLASH NEWS: நாளை மநீம வேட்பாளர் பட்டியல் வெளியீடு…!!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையமும் தேர்தலுக்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் அதிமுகவினர் மற்றும் திமுகவினர் குறை கூறிக்கொண்டு விமர்சனம் செய்து மோதல் போக்கில் ஈடுபட்டு வருகின்றனர்.

மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன் மக்களுடைய தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். மேலும் கூட்டணி குறித்த குழப்பமும், தொகுதி பங்கிடுவதில் இழுபறியும் நீட்டித்து வருகிறது. இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் நாளை காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும் என்று கமலஹாசன் கூறியுள்ளார்.

Categories

Tech |