Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

உடம்புக்கு அதிக எனர்ஜியை தரக்கூடிய… கிராமத்து சுவையில்… ருசியான இந்த ஜூஸ்ஸ செய்து அசத்துங்க..!!

ராகி மில்க் ஷேக் செய்ய தேவையான பொருட்கள்:

ராகி மாவு                           – 1 1/2 டேபிள் ஸ்பூன்
கொக்கோ பவுடர்           – 1/2 டேபிள் ஸ்பூன்
பால்                                      – 1 1/2 கப்
சர்க்கரை                            – 1 டேபிள் ஸ்பூன்
வென்னிலா எசன்ஸ்   – 1/4 டீஸ்பூன்
தண்ணீர்                             – 3/4 கப்

செய்முறை:

முதலில் அடுப்பில்  பாத்திரத்தை வைத்து, பால் ஊற்றி சில நிமிடம் நன்கு கொதிக்க வைத்து இறக்கி, குளிர வைக்கவும்.

பின்பு  மற்றொரு பாத்திரத்தில் ராகி மாவு, கொக்கோ பவுடரைப் போட்டு, சிறிது தண்ணீர்  ஊற்றி கட்டியில்லாமல்  நன்கு கலந்து கொள்ளவும்.

மேலும் அடுப்பில் கலந்து வைத்த பாத்திரத்தை வைத்து, இந்த கலவையானது  நன்கு கெட்டியாகும் வரை வேக விட்டு இறக்கி கால் மணி நிமிடம் நன்கு குளிர வைக்கவும் .

அதனை அடுத்து மிக்ஸர் ஜாரில் குளிர வைத்த பால், சர்க்கரை, குளிர வைத்துள்ள ராகி கலவை, வென்னிலா எசன்ஸ் சேர்த்து, நன்கு மென்மையாக அரைத்து எடுத்து பரிமாறினால், சுவையான ராகி மில்க் ஷேக் ரெடி.

Categories

Tech |