Categories
மாநில செய்திகள்

மத்திய அமைச்சர் வருகையால் உற்சாகம்… வானதி ஸ்ரீனிவாசன் பேட்டி…!!!

மத்திய அமைச்சர் அமித்ஷா வருகை உற்சாகத்தை அளிப்பதாக வானதி ஸ்ரீனிவாசன் பேட்டி அளித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பாஜகவின் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றது. அப் பிசாரத்தில் தேசிய மகளிர் அணி தலைவர்  வானதி சீனிவாசன் கலந்து கொண்டார். பாஜக தமிழக சட்டப்பேரவைத் தேர்தலிலும் கன்னியாகுமாரி நாடாளுமன்ற இடைத்தேர்தலிலும் வெற்றி பெறும் வாய்ப்பு மிக அதிகமாக உள்ளது என்று கூறினார்.

மேலும் எங்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் கன்னியாகுமாரி மாவட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வருகை அமைந்துள்ளது என்று மகிழ்ச்சியாக கூறியுள்ளார். பாஜக நிச்சயம்  20  தொகுதிகளில் சட்டப்பேரவையில் வெற்றி பெறுவதோடு பாஜக கூட்டணி இந்த தேர்தலில் அமோக வெற்றியை தனதாக்கி கொள்ளும் என்று தெரிவித்தார் .

Categories

Tech |