நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘கர்ணன்’ படத்தின் மூன்றாம் பாடல் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கர்ணன். பரியேறும் பெருமாள் பட இயக்குனர் இயக்குனர் மாரி செல்வராஜ் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார். கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ள இந்த படத்தில் கௌரி கிஷன் ,யோகிபாபு ,லட்சுமி பிரியா ,லால் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
After the phenomenal success of first two #Karnan singles, am extremely excited to announce the #3rdSingle of #Karnan #DraupathaiyinMuttham releasing on March 11th @dhanushkraja @Music_Santhosh @mari_selvaraj @thinkmusicindia @ZeeTamil @KarnanTheMovie #KarnanArrivesOnApril9 pic.twitter.com/Wa2u1CI3SM
— Kalaippuli S Thanu (@theVcreations) March 9, 2021
மேலும் சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படம் வருகிற ஏப்ரல் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஏற்கனவே இந்த படத்தில் இடம்பெற்ற கண்டா வரச்சொல்லுங்க மற்றும் பண்டாரத்தி புராணம் ஆகிய பாடல்கள் வெளியாகி இணையத்தை கலக்கியது. இந்நிலையில் இந்த படத்தின் மூன்றாம் பாடல் வருகிற மார்ச் 11ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.